Sunday 14 December 2014

திரு ரஜினிகாந்த்திடம் சில கேள்விகள்

திரு ரஜினிகாந்த்திடம் சில கேள்விகள்… (1)

எஸ். ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டது பற்றி நான் விமர்சித்துப் பேசியதைப் பலரும் பலவாறு புரிந்து கொண்டுள்ளனர்.  அது பற்றிய என் விளக்கமும், ரஜினியிடம் நான் கேட்ட சில கேள்விகளும் இங்கே:
1.இலக்கிய விழாவில் சினிமா கலைஞர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை.  அப்படிச் சொல்வதற்கு நான் யார்?  இது ஒரு ஜனநாயக நாடு.  எந்த விழாவிலும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.  ஆனால் அப்படிக் கலந்து கொள்ளும் போது என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்?  துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார்.  எப்படி?  பார்வையாளர்களில் ஒருவராக.  ஆனால் எஸ்.ரா. விழாவில் ரஜினி கலந்து கொண்டது எப்படி?  அது பற்றியே என்னுடைய கேள்விகள்.
அழைப்பிதழிலேயே தகராறு.  ரஜினி படத்தைப் பெரிதாகப் போட்டு, எஸ்.ரா. படத்தைச் சிறிதாகப் போட்டிருந்தார்கள்.  இப்படிச் செய்வது எழுத்தாளனை செருப்பால் அடிப்பதற்குச் சமம் என்று எழுதியிருந்தார் ஞாநி.  நடந்து முடிந்த பாராட்டு விழா எஸ்.ரா.வுக்கா? ரஜினிக்கா?
தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த பெயர் ரஜினி.  அடியேனுக்கும் அவருக்கும் ஓரிரு ஒற்றுமைகள் உண்டு.  என்னைப் போலவே அவரும் வெள்ளந்தியான மனிதர்.  மஹா அவ்தார் பாபாவைத் தொழுபவர்.  மற்றும் இமயமலைப் பயணம்.  அவரிடம் நான் வியந்து பாராட்டும் பண்பு அவரது எளிமை. மற்றும் போலித்தனமோ பாசாங்கோ இல்லாத தன்மை.  பத்திரிகை நிருபர் வருகிறார் என்றதும் லேண்ட்மார்க்கில் granta தொகுப்புகளை வாங்கி மேஜையின் மீது வைத்து விட்டு பத்திரிகையாளரிடம் பேச்சுக்குப் பேச்சு “க்ராண்டாவெல்லாம் படிக்கிறோம்… இந்தத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் புரியவில்லையே” என்றெல்லாம் பாசாங்கு செய்ய மாட்டார் ரஜினி.  அவர் நடிப்பது திரையில் மட்டுமே.  ரஜினியின் நடிப்பும் எனக்குப் பிடிக்கும்.  அபூர்வ ராகங்களிலிருந்து பதினாறு வயதினிலே, தளபதி வரை பல படங்களில் அவரது நடிப்பை நான் ரசித்திருக்கிறேன்.
பொதுவாழ்விலும் தன் சொந்த வாழ்விலும் அற இயல்பை (ethics) வெளிப்படுத்தும் ரஜினி எஸ்.ரா. விழாவில் தனக்கு நடந்த ஜால்ரா புகழ்ச்சியைத் தட்டிக் கேட்டிருக்க வேண்டாமா? ”இது எனக்கு நடக்கும் பாராட்டு விழாவா? எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவா?” என்று கேட்டிருக்க வேண்டாமா?  எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் என் புகைப்படத்தை ஏன் பெரிதாகப் போட்டீர்கள் என்று கண்டித்திருக்க வேண்டாமா?  அழைப்பிதழில் என் படமே வந்திருக்கக் கூடாது என்று சொல்லியிருக்க வேண்டாமா?
எஸ்.ரா.வுக்கு நடந்த பாராட்டு விழாவில் எஸ்.ரா.தானே கடைசியில் பேச வேண்டும்?  அதுதானே நடைமுறை?  அதை விட்டு விட்டு ரஜினியைக் கடைசியில் பேச அழைத்தது ஏன்?  சாருவும் சினிமா கலைஞர்களை விழாவுக்கு அழைக்கிறார் என்று கூறுபவர்களையும் ரஜினிக்குப் பாராட்டு விழா நடத்தியவர்களையும் கேட்கிறேன்.  இன்னொரு முறை காமராஜர் அரங்கில் கூட்டம் நடத்தி, அதில் ரஜினிக்குப் பிறகு எஸ்.ரா.வைப் பேச அழைக்க முடியுமா?  உங்களிடம் அந்தத் துணிச்சல் இருக்கிறதா?  இதை ஒரு சவாலாக உங்கள் முன் வைக்கிறேன். கருணாநிதியைப் போல் வார்த்தைகளில் பதில் சொல்லி விளையாடாமல் செய்து காட்டுங்கள்.  அல்லது, ரஜினியை ஏன் கடைசியாகப் பேச அழைத்தீர்கள் என்று நேரடியாக பதில் சொல்லுங்கள்.  ஏன் என்றால், எஸ்.ரா.வுக்கு முன்னால் ரஜினியைப் பேச அழைத்தால் அரங்கம் காலியாகி விடும்.  அந்தக் கூட்டம் எஸ்.ரா.வுக்காக வந்தது அல்ல; ரஜினிக்காக வந்தது.
இதையும் ரஜினி மேடையில் கண்டித்திருக்க வேண்டும்.  கண்டிக்கவில்லையானாலும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.  எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் எஸ்.ரா.தான் கடைசியில் பேச வேண்டும் என்று அவர் சொல்லி இருக்க வேண்டும்.   ஏன் அவர் இதைச் சொல்லவில்லை?  துக்ளக் விழாவில் ரஜினியா கடைசியில் பேசுகிறார்?  அங்கே அவர் வெறுமனே பார்வையாளராக முதல் வரிசையில் அமர்ந்திருப்பார்.  அப்படியானால் இலக்கியம் என்றால் அவ்வளவு மட்டமாகப் போய் விட்டதா?  எல்லோரையும் புத்தகம் படிக்கச் சொல்லி அறிவுரை சொன்ன ரஜினியே இலக்கியவாதிகளை அவமதிப்பது போல் நடந்து கொள்ளலாமா?
தன் பேச்சில் தாமஸ் ஆல்வா எடிஸன் பைபிள் படித்தது பற்றிக் குறிப்பிட்டார் ரஜினி.  அவர் பைபிள் படித்ததில் ஆச்சரியம் என்ன?  அவர் பகவத் கீதை படித்திருந்தால்தானே ஆச்சரியம்?  மேலும், படிப்பு என்பது ஆன்மீகப் புத்தகங்களைப் படிப்பதா?  ஊருக்கு ஒன்பது பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  அங்கே பயிலும் மாணவர்களும் படித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்?  அதுவும் இலக்கியமும் ஒன்றா? தமிழர்கள் பல துறைகளில் படிப்பாளிகளாக இருந்தாலும் இலக்கிய வாசிப்பு அவர்களிடம் அறவே இல்லை என்பதுதானே நூறு வருடங்களாக இங்கே இருக்கும் நிலைமை?
புத்தக விழாக்களில் மக்கள் கை நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு போகிறார்கள்.  ஆனால் அதெல்லாம் சமையல், ஆன்மீகம், டிக்‌ஷனரி, பாடப் புத்தகங்கள் போன்றவையாக இருக்கின்றனவே?  மற்ற மாநிலங்களில் இப்படியா நடக்கிறது?  சரி, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.  கன்னடத்துக்கு மட்டும் எப்படி எட்டு பாரதீய ஞான பீடப் பரிசும் தமிழுக்கு இரண்டும் கிடைத்தது?  தமிழர்கள் இலக்கியம் படிப்பதில்லை; தமிழர்களுக்கு சினிமா தான் எல்லாம் என்பதைத்தானே இது காட்டுகிறது?  இப்படிப்பட்ட நிலையில் நீங்களும் ஆன்மீகம் படிப்பதுதான் படிப்பு என்றே புரிந்து கொண்டு எப்படி ஒரு இலக்கிய விழாவில் பேசுகிறீர்கள்?
மதிப்புக்குரிய ரஜினியிடம் இன்னொரு கேள்வி:  இயல் விருதை சர்வதேச விருது என்கிறார்களே, இதைப் பற்றி விசாரித்து அறிந்தீர்களா?  கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பு தமிழ் எழுத்தாளருக்கு ஒரு விருது கொடுத்தால் அதற்குப் பெயர் சர்வதேச விருதா?  இப்படி ஒரு எழுத்தாளரிடம் ஏமாந்து போனதால் தான் உங்களை வெள்ளந்தியான மனிதர் என்கிறேன்.  இப்போதாவது அந்த விருதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  மெல்பேர்ன் நகரில் (ஆஸ்திரேலியா) உள்ள தமிழர்கள் ஒரு ரெக்ரியேஷன் கிளப் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் என்னுடைய நண்பர்கள்.  என்னை அங்கே அழைத்து ஒரு பொங்கல் தினத்தில் முயல் படம் ஸாரி கங்காரு படம் போட்ட ஒரு மெமண்டோவைக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  உடனே நான் சர்வதேச விருது கொடுத்து விட்டதாக சொல்லிக் கொள்ளலாமா?  சமீபத்தில் கூட சிங்கப்பூரில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் முஸ்தஃபா கடையிலிருந்து எனக்கு ஒரு சிங்கப்பூர் பனியன் கொண்டு வந்து கொடுத்தார்.  உடனே நான் சர்வதேச பனியன் கிடைத்து விட்டது என்று சொல்லி ஒரு விழா வைத்தால் அதற்கு நீங்கள் வருவீர்களா?
____________________________________________

திரு ரஜினிகாந்த்திடம் சில கேள்விகள்… (2)

நோபல் பரிசு, மேன் புக்கர் பரிசு போன்ற விருதுகளைத்தான் நாம் சர்வதேச விருதுகள் என்று சொல்ல முடியும்.  உதாரணமாக, புக்கர் பரிசு எப்படிக் கொடுக்கப்படுகிறது என்றால், உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் வெளியாகியுள்ள பல்வேறு எழுத்தாளர்களின் நாவல்களையும் பரிசீலித்து அவற்றில் சிறப்பானவற்றை long list செய்கிறார்கள்; பிறகு அதிலிருந்து ஒரு short list வருகிறது.  பிறகு அந்த குறும்பட்டியலிலிருந்துதான் ஒரே ஒரு நாவல் தேர்ந்தெடுக்கப் படுகிறது.  இதேபோல்தான் ஏஷியன் மேன் புக்கர் விருதும்.  ஆசியாவிலிருந்து வெளிவந்த நாவல்களிலிருந்து  (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை) ஒரு நாவல் தேர்ந்தெடுக்கப்படுகிறது.  முதலில் long list… பிறகு short list.  கடைசியில் ஒரே ஒரு நாவல்.  அதற்குப் பெயர் கூட சர்வதேச விருது அல்ல; Asian Man Booker…  அது ஒரு ஆசிய விருது.  அவ்வளவுதான்.  எனவே இயல் விருது என்பது நம்முடைய கலைமாமணி விருதுக்கு சமமான ஒரு விருது என்பதே உண்மை.
இதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால், ”ரஜினி மிகப் பெரிய எழுத்தாளர்” என்று ராமகிருஷ்ணன் சொன்னதுதான்.  இதையாவது நீங்கள் கண்டித்திருக்க வேண்டாமா?  கண்டித்திருந்தால் உங்கள் மதிப்பு கூடுமே ஒழிய குறைந்திருக்காதே?  அரசியலில் இப்படிப்பட்ட வீண் முகஸ்துதிகளை நீங்களே விரும்பியதில்லையே?  அப்படியிருக்க, உங்களை ஒரு ஒருவர் “மிகப் பெரிய எழுத்தாளர்” என்று சொன்னபோது உங்களுக்குக் கூச்சமாக இல்லையா?  நல்லவேளை, நீங்கள் பதிலுக்கு எஸ். ராமகிருஷ்ணனை “மிகப் பெரிய நடிகர்” என்று புகழவில்லை.  அப்படிப் புகழ்ந்திருந்தால் அது புகழ்ச்சிக்குப் பதிலாக வேறு விதமாக அர்த்தமாகி இருக்கும்…
பாவம், தமிழ் எழுத்தாளர்கள் இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போக வேண்டியதில்லை.
(நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: யாரும் என் பேச்சை விடியோ எடுத்து நெட்டில் பதிவேற்றம் செய்வார்கள் என்ற நம்பிக்கை போய் விட்டது.  யாரேனும் என் பேச்சை எழுத்து வடிவத்தில் கொடுக்க முடியுமா?)

 


 

Saturday 29 November 2014

ஜெயமோகனை செருப்பால் அடியுங்கள் - சாரு ஆவேசம்!

எழுத்துலகில் ஒரு சமூக விரோதி

April 20th, 2010

 

ஜெயமோகனை நீங்கள் எந்த இடத்தில் பார்த்தாலும் அவர் முகத்தில் காறித் துப்புங்கள் என்று என் வாசகர்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
கவிதா சரண் என்ற பத்திரிகையில் 15 ஆண்டுகளுக்கு முன்பே அவர் ஒரு மனித விரோதி, சமூக விரோதி, ஹிட்லரைப் போன்ற ஒரு ஃபாஸிஸ்ட் என்று எழுதியிருக்கிறேன். குற்றாலத்தில் கலாப்ரியா நடத்திய கருத்தரங்கில் சபையில் வைத்து ஜெயமோகன் என்னை கீழ்த்தரமாகப் பேசியபோது அவரை அடிக்கப் போயிருக்கிறேன்.  சங்க காலத்து இலக்கியமெல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கியது என்று சுப மங்களா கருத்தரங்கில் அவர் பேசிய போது அறிவுமதி அவரை அடிக்கப் போனார்.  அப்போது பாலு மகேந்திராவும் நானும் ஜெயமோகனைக் காப்பாற்றினோம்.  அ. மார்க்ஸின் ஜாதியைச் சொல்லி ஜெயமோகன் ஒரு கருத்தரங்கில் திட்டிய போது அவரை அடிக்கப் பாய்ந்தேன்.
ஜெயமோகனின் புதிய காலம் என்ற குப்பைப் புத்தகத்தில் மனுஷ்ய புத்திரனை ஊனமுற்றவர் ஊனமுற்றவர் என்று பல இடங்களில் திட்டியிருக்கிறார்.  அதனால்தான் டிசம்பரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அந்தப் புத்தகத்தைக் கிழித்து எறிந்தேன்.
சில ஆண்டுகளுக்கு முன், ஜெயமோகன் நடத்திய சொல் புதிது பத்திரிகையில் மனுஷ்ய புத்திரனை நொண்டி நாய் என்று எழுதி மன்னிப்புக் கேட்டார்.  இப்போது என்னவோ புதிதாக ஜெயமோகனின் மனித விரோதப் போக்கைக் கண்டு பிடித்து விட்டது போல் எல்லோரும் குதிக்கிறார்கள்.  நான் சொன்னபோதெல்லாம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?  குறிப்பாக நான் அபிலாஷைக் கேட்கிறேன்.  புதிய காலம் என்ற புத்தகத்தை சபையில் வைத்துக் கிழித்து விட்டேன் என்ற விஷயம்தான் பரபரப்பாகப் பேசப்பட்டதே தவிர அதில் ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனை ஊனமுற்றவர் என்று திட்டியதைப் பற்றி யாருமே கண்டு கொள்ளவில்லை.
அப்போதே நீங்கள் ஜெயமோகனை செருப்பால் அடித்திருக்க வேண்டாமா?
இப்போது ஜெயமோகனின் புதிய காலம் என்ற புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறேன். இந்தக் குப்பையின் பதிப்பாளர் யார் தெரியுமா?  உயிர்மை! அதாவது, மனுஷ்ய புத்திரனின் மனதுக்குள் ஓடும் எண்ணம் என்ன தெரியுமா?  அவர் பெரிய தியாகியாம்!
இப்போது மேற்கோள்:
“மனுஷ்ய புத்திரனில் புரட்சிகரம் உருவாகாது போகக் காரணமாக அமைந்த் ஆளுமைக் கூறு என்ன? அவரது உடலின் ஊனம்தான்.  ஒரு மேலோட்டமான வாசகன் கூட அவரது ஆரம்ப காலக் கவிதைகளில் புரட்சிகரத்துடன் கூடவே தன்னிரக்கமும் கலந்து ஒலிப்பதைக் காணலாம். மெல்ல மெல்ல தன்னிரக்கம் புரட்சிகரத்தை தோளால் இடித்து பெஞ்சில் இருந்து தள்ளி விட்டு விடுகிறது.  இந்தத் தன்னிரக்கத்தை விரிவாக ஆராயாமல் மனுஷ்ய புத்திரனின் கவிதைகுள் நுழைய முடியாது.  நமது சமூகம் ஊனமுற்ற ஒருவரை புறனடையாளனாக நடத்துகிறது.  காரணம் இது இன்னமும் நிலப்பிரபுத்துவ மனநிலை நிலவும் சமூகம்.  உடலே அதன் அடிப்படை.  உடலுழைப்பே இங்கு ஆதார விசை.  மூளையை மயமாக்கிய நவீன யுகத்தின் மதிப்பீடுகள் அங்கே உருவாவதில்லை.  ஆகவே, புறக்கணிக்கப்பட்டு, கருணைக்காக காத்திருக்க வைக்கப்பட்டு இழிவு கொள்ளும் ஓர் மானுட இருப்பின் குரலாக அவரது தொடக்க காலக் கவிதைகளில் தன்னிரக்கம் வெளிப்படுகிறது.  அது இயல்பானது.” (பக்கம்: 265)
”ஊனமுற்றவன் என்ற சுய உணர்வு எப்படி புரட்சிகரத்திற்கு எதிராக இயங்குகிறது என்பதுதான் இன்னும் கூர்ந்து ஆராயத்தக்கது.”
சரி, ஜெயமோகன், என்னுடைய குஞ்சு கூட கொஞ்சம் சிறிய சைஸாக, ஊனமுற்றதாகத்தான் இருக்கிறது.  அதையும் கொஞ்சம் ஆராய்ந்து கட்டுரை எழுதுங்களேன், ப்ளீஸ்.
மேலும் மேற்கோள்கள்:
“அவரது (மனுஷ்ய புத்திரனின்) முதல் தொகுப்பில் உள்ள கவிதைகள் ‘பரவாயில்லை… கால்கள் இல்லாவிட்டால் என்ன, நீயும் புரட்சி செய்யலாம்’ என்று அவர் (மனுஷ்ய புத்திரன்) அவரிடமே கூறிக் கொண்டவை போல் உள்ளன.” (பக்கம்: 266)
“(புரட்சியாளன்) மக்களை பின்னால் திரும்பிப் பார்த்து ‘வாருங்கள் என் பின்னால்’ என்று அறைகூவுபவனாக இருக்கிறான். ஊனம் காரணமாக புறனடையாளனாக உணரும் ஒருவனின் கோணம் அதற்கு நேர்மாறானது.  அவன் தன்னை கடந்து முன்னால் செல்லும் வரலாற்றை, மக்கள் திரளைப் பார்த்து ‘என்னைப் பாருங்கள்’ என்று கோருபவனாக இருக்கிறான்.”
“படிப்படியாக மனுஷ்ய புத்திர புரட்சிகர மனநிலையை முற்றாகவே உதறிவிட்டு தன்னிரக்கத்திற்குள் செல்வதை நாம் காண்கிறோம்…”
“மனுஷ்ய புத்திரன் அவரது உடல் குறித்த குறையுணர்வால் புரட்சிகர உணர்வெழுச்சியை ஐயப்பட்டு தன்னிரக்கக் கவிதைகளுக்கு வந்தார்…” (பக்:268)
மனுஷ்ய புத்திரனின் சுய பிரக்ஞையில் அவரது ஊனம் அழுத்தமான ஒரு தொடக்கத்தை அளித்திருக்கிறது என்பதைக் கண்டோம். (பக்கம்: 273)
“மனுஷ்ய புத்திரனின்  கவியுலகில் உவகையே இல்லை.  குதூகலத்தின், பரவசத்தின், எக்களிப்பின் நெகிழ்தலின் கணங்களே பதிவாகவில்லை.” (பக்: 276)
மனுஷ்ய புத்திரன் பற்றி இவ்வளவு சொல்லும் ஜெ. தன்னைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்:
“இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தற்கொலை முயற்சியில் இருந்து விடுபட்டு எழுந்து ஒரு காலையில் புதிதாகப் பிறந்தபின் இன்றுவரை நான் துயரமாக ஒருநாள் கூட இருந்ததில்லை என்று கூறினால் என்னை அறிந்தவர்கள் நம்புவார்கள்.  மனச்சோர்வும் சஞ்சலமும் கசப்பும் என்னிடம் இல்லை.  ஒரு தருணத்தில் கூட நான் புறக்கணிக்கப்பட்டவனாக, தோற்கடிக்கப்பட்டவனாக, எளியவனாக என்னை உணர்ந்ததில்லை.  என் எளிய உடலின் எல்லைகளை மீறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு பேராற்றலையே நான் என்று உணர்கிறேன்.”
ஆனால் ஜெயமோகனுடன் நெருக்கமான நட்பில் இருக்கும் ஒருவரோ இதை மறுக்கிறார்.  தினம் தினம் ஜெ. என்னைப் பற்றிய பொறாமையின் காரணமாக தூக்கம் வராமல் துயரப்படுகிறார்.  தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரைகளைப் போட்டுக் கொள்கிறார்.  தொடர்ந்து தூக்கமே இல்லாததன் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு அதற்கும் பல மாத்திரைகளை உட்கொள்ளுகிறார்.  இதுதான் ஜெயமோகனின் நண்பர் அவரைப் பற்றி என்னிடம் சொன்னது.  அதைக் கூட அவர் சொல்லியிருக்க மாட்டார்.  குடிபோதையில் உளறி விட்டார்.  மேலும், ஜெயமோகனுக்கு தோழிகள் இல்லாததால் மிகப் பெரிய செக்ஸ் வறுமையில் இருக்கிறார்.  அதுவும் அவருடைய மனநோய்க்குக் காரணம்.  ஆனால் தனக்கு இல்லாததை அவர் மற்றவர் மீது திணிக்கிறார்.
இதோ மேற்கோள்:
”மனுஷ்ய புத்திரனின் மொத்தக் கவிதையுலகிலும் பெண்ணுடல் குறித்த சித்தரிப்புகளே இல்லை.” (பக்கம்: 280)
இன்னும் அந்தக் கட்டுரையில் நிறைய இருக்கிறது நண்பர்களே…
நான் ஜெயமோகனின் எழுத்து எதையும் வாசிப்பதில்லை.  ஒரு மனநோயாளியின் எழுத்தை வாசிப்பதில் என்ன பயன்?  இப்போது அபிலாஷையும் ஊனமுற்றவர் என்று ஜெயமோகன் எழுதியிருப்பதாக அறிகிறேன்.  இரண்டுக்கும் சேர்த்து 28 ஆண்டுகள் ஜெயமோகனை சிறையில் அடைக்க வேண்டும்.
ஜெயமோகனின் அயோக்கியத்தனமான அவதூறுகளுக்கு அபிலாஷ் எழுதியிருக்கும் பதில் இங்கே:

 

Friday 21 November 2014

எச்சகல 1 லட்சம் விற்கும் என ஞானதிருஷ்டியில் கணித்து ஆப்பு வாங்கிய மண்ட!

எக்ஸைல்

October 22nd, 2011

 

மேலே நீங்கள் காணும் இணைப்பை என் நண்பர் கண்ணன் பெல்ஜியத்திலிருந்து அனுப்பியிருந்தார்.  இங்கே ராமகிருஷ்ணன் நிறைய சொல்கிறாரே என்று ஹாருகி முராகாமியின் ஒரு நாவலை வாங்கிப் படித்தேன்.  செம போர்.  எனக்கு எந்த எழுத்தாக இருந்தாலும் சுவாரசியமாக இல்லாவிட்டால் படிக்கப் பிடிக்காது.  நான் இங்கே சொல்வது சுஜாதாவின் எழுத்தில் உள்ள சுவாரசியம் இல்லை.  ஸெர்பிய எழுத்தாளர் மிலோராத் பாவிச்-இன் Dictionary of Khazars நாவலைப் போன்ற கடினமான எழுத்தாக இருந்தாலும் அதிலும் ஒரு சுவாரசியம் இருக்கும்.  மாரியோ பர்கஸ் யோசாவின் ஒரு டஜன் நாவல்களை இரண்டு முறை படித்தவன் நான்.  ஆனால் முராகாமி என்னைக் கவரவில்லை.  ஒருவேளை அவரது மற்ற நாவல்கள் சுவாரசியமாக இருக்கலாம்.  அதற்காக அவரது இன்னொரு நாவலை எடுத்து நான் படிக்க விரும்பவில்லை.  அவ்வளவு நேரம் எனக்கு இல்லை.  ஆனாலும் முராகாமியின் நூல்கள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் விற்பதைப் பார்க்கும் போது பொறாமையாக உள்ளது. முராகாமியின் சமீபத்திய நாவல் ஒரே மாதத்தில் ஜப்பானில் பத்து லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் உலகம் பூராவும் மில்லியன் கணக்கில் விற்கிறது.
இங்கே கேரளத்தில் எம்.டி. வாசுதேவன் நாயரின் நாலு கட்டு என்ற நாவல் பல லட்சம் பிரதிகள் விற்றன.
இந்தப் பின்னணியில் எக்ஸைல் பற்றி யோசிக்கிறேன்.  ஒரே வருடத்தில் இந்த நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்கும் என்பது என் கணிப்பு.  அல்லது, குறைந்த பட்சம் 50,000 பிரதிகள்.  உளறுகிறான் என்று நினைக்காதீர்கள்.  எத்தனையோ பத்திரிகைகள் திமுகதான் வெற்றி பெறும் என்று கணித்துக் கொண்டிருந்த போது நான் திமுக 30 இடங்களுக்குள்தான் வரும் என்று துக்ளக்கில் எழுதினேன்.  22 இடங்கள்தான் பெற்றது திமுக.  அது போலவே இப்போது கணிக்கிறேன்; எக்ஸைல் குறைந்த பட்சம் 50,000 பிரதிகள் ஒரே வருடத்தில் விற்கும்.   ஊட்டியில் தங்கி எக்ஸைலை எழுதிக் கொண்டிருந்த போது சுமார் நூறு பேர் என்னிடம் நான் எழுதிய புத்தகங்களைக் கேட்டார்கள்.  அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல; ஒருவர் சீனியர் வக்கீல்; ஒருவர் அந்தப் பிராந்தியத்தின் அதிமுக தலைவர்;  ஒருவர் தேயிலைத் தோட்ட அதிபதி.  இப்படி நூறு பேர்.  இவர்கள் பதிப்பகத்துக்கு மணியார்டர் அனுப்பி புத்தகம் வாங்க மாட்டர்கள்.  அது இந்த ஜென்மத்தில் நடக்காது.  அவர்களின் வீட்டுக்கு எதிரே உள்ள புத்தகக் கடையில் கிடைத்தால் மட்டுமே வாங்குவார்கள்.  அந்தப் புத்தகக் கடைக்குச் சென்றேன்.  தமிழில் உள்ள எல்லா எழுத்தாளர்களின் புத்தகங்களும் இருந்தன.  என் புத்தகம் இல்லை.  மேனேஜர் வந்து என்னிடம் கைகுலுக்கினார்.  என்னுடன் வந்திருந்த நண்பர் அந்த மேனேஜர் எப்போதும் என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார் என்றார்.  ஆனால் மேனேஜர் என் புத்தகங்களைப் படித்ததில்லை.  காரணம், கிடைக்கவில்லை.  பத்திரிகைகளில் என் கட்டுரைகளைப் படித்திருக்கிறார்.  ”நான் உங்களுடைய தீவிரமான ரசிகன்; ஆனால் என் கடையில் உங்கள் புத்தகம் இல்லை” என்றார்.
ஊட்டியில் மட்டும் எக்ஸைல் 250 பிரதிகள் விற்கும்.  நந்தா, அந்தப் பொறுப்பு உங்களுடையது.  நந்தா அந்த ஊரின் பிரபலமான அதிமுக தலைவர்களில் ஒருவர்.
வாசகர் வட்டத்தில் 1500 பேர் உள்ளனர்.  இவர்களில் எத்தனை பேர் எக்ஸைல் வாங்குவார்கள்?  பார்த்திபன், உங்கள் கணக்கு என்ன?  பாஸ்கர், நீங்கள் சொல்லும் கணக்கு என்ன? சாருஆன்லைன் வாசகர்களில் எத்தனை பேர் எக்ஸைல் நாவலை வாங்குவீர்கள்?  கண்ணன் (பெல்ஜியம்) போன்ற நண்பர்கள் பத்து பிரதிகள் வாங்கி, தனது நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.  பெயர் குறிப்பிடாதவர்கள் வருந்தத் தேவையில்லை.  எல்லோருடைய பெயரும் என் மனதில் உள்ளது.  ஒவ்வொருவரும் ஐந்து, பத்து பிரதிகள் வாங்கி, நண்பர்களிடம் கொடுக்க வேண்டும்.  எக்ஸைலை நீங்கள் ஒரு இலக்கியப் பிரதியாகவும் வாசிக்கலாம்; அதே சமயம், “பணம் சம்பாதிப்பது எப்படி?” என்ற புத்தகமாகவும் வாசிக்கலாம்.  இப்படிச் சொல்வதால் அதன் இலக்கிய மதிப்பு குறைந்து போகாது.  ஏனென்றால், ஜனகனமன என்ற பாடலை நாம் இலக்கியப் பிரதியாகவும் வாசிக்கிறோம்; தேசிய கீதமாகவும் வைத்திருக்கிறோம் என்பது போல.
தமிழர்களிடம் அவ்வளவாக வாசிப்புப் பழக்கம் இல்லை.  இதை நாம் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.  ஆனால் அதே சமயம், வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை எடுத்துக் கொண்டால் இங்கே உள்ளவர்களைப் போல் ஒரு வாசகனை நீங்கள் உலகம் பூராவும் பார்க்க முடியாது.  உதாரணமாக, இதாலோ கால்வினோ என்ற இத்தாலிய எழுத்தாளரை இத்தாலியில் தெரிந்தவர்களை விட தமிழ்நாட்டில் தெரிந்தவர்கள் அதிகம்.  அதேபோல் மார்க்கெஸ்; அதேபோல் போர்ஹெஸ்.  இங்கே உள்ள வாசகர்கள் உலக இலக்கியத்தையே விரல்நுனியில் வைத்திருக்கிறார்கள்.  வாசகர்களே இப்படி என்றால், எழுத்தாளர்கள் எப்படி இருப்பார்கள்?  தமிழ் எழுத்தாளன் அளவுக்குப் பரந்து பட்ட வாசிப்பு அனுபவம் உள்ள எழுத்தாளர்களை உலகில் எந்த மூலையிலும் பார்க்க முடியவில்லை.  சர்வதேச இலக்கியக் கருத்தரங்குகளில் நான் குறிப்பிடும் எழுத்தாளர்களைப் பார்த்து மூக்கில் விரல் வைக்கிறார்கள்.  அப்போது நான் சொல்வேன்; ”எங்கள் ஊரில் நான் கம்மியாகப் படித்தவன்.  எஸ். ராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருக்கிறார்.  அவரைப் பார்த்தால் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள்…”
என் நண்பர்களிடம் நான் அடிக்கடி சொல்வது இதுதான்:  நான் எழுத்தாளன் என்பதை விட ஒரு வாசகன் என்பதில்தான் பெருமையும் கர்வமும் கொள்கிறேன்.  அந்தத் தகுதியில் ஒரு வாசகனாக எக்ஸைல் நாவலை எப்படிப் பார்க்கிறேன்?  Milorad Pavic எழுதிய Dictionary of Khazars என்ற நாவலைப் போன்ற ஒரு நாவல் உலகின் எந்த மொழியிலும் எழுதப்பட்டதில்லை.  Ronald Sukenik எழுதிய 98.6 என்ற நாவலைப் போன்ற ஒரு நாவல் உலகின் எந்த மொழியிலும் எழுதப்பட்டதில்லை.  இவையெல்லாம் ஈடு, இணை இல்லாத unique தன்மை கொண்ட நாவல்கள்.  அதேபோல் எக்ஸைல் நாவலுக்கு இணையான ஒரு நாவலை நீங்கள் உலகில் எந்த மொழியிலும் பார்க்க முடியாது.  இம்மாதிரி முறையில் நான் அறிந்த வரை உலக மொழிகளில் எழுதப்பட்டதில்லை.  ஒரு கதாபாத்திரம் ஒரு கதையைச் சொல்கிறது.  உடனே இன்னொரு பாத்திரம் வந்து அந்தக் கதையைக் கூறு போட்டு, இன்னொரு கதையைச் சொல்கிறது.  நான் மேலே குறிப்பிட்ட டிக்‌ஷனரி ஆஃப் கஸார்ஸ், 98.6 ஆகிய இரண்டு நாவல்களும் வாசிப்பதற்குக் கடினமானவை.  ஆனால் எக்ஸைலை யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம்.  இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்களும் வாசிக்க முடியும்.
இந்த நாவல் உங்கள் கைகளுக்கு டிசம்பர் 6-ஆம் தேதி அன்று கிடைக்கும்.  நீங்கள் தமிழ்நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் டிசம்பர் 6-ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு உங்கள் ஊரில் உள்ள கடைகளில் எக்ஸைல் விற்பனைக்கு வரும்.  அதாவது,  டிசம்பர் 6-ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடக்கும் வெளியீட்டு விழாவின் போது எக்ஸைல் விற்பனைக்கு வரும் அல்லவா, அதே தினம் அதே நேரம் உங்கள் ஊர்க் கடைகளில் எக்ஸைல் விற்பனைக்கு வரும்.  கிட்டத்தட்ட ரஜினி பட ரிலீஸ் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  முன் வெளியீட்டுத் திட்டமும் உண்டு.  அது பற்றி விரைவில் விபரம் தெரிவிப்பேன்.  முன் வெளியீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொண்டால் புத்தகம் சலுகை விலையில் கிடைக்கும்.  வேறு எந்த விபரம் வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் வேண்டும் தாஸன்
சாரு

 

Saturday 4 October 2014

சாநிக்கு ரிவிட் அடிக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் (2)

நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

December 23rd, 2012

Amazon மூலம் kindle edition ஆக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள என்னுடைய சிறுகதைத் தொகுதி Morgue Keeper-இன் மொழிபெயர்ப்பு படு மோசம் என்பதாக ஒரு அன்பர் எழுதியிருக்கிறார்.  இதை நான் விமர்சனமாக, ஒரு அபிப்பிராயமாக எடுத்துக் கொள்ள முடியாது.  ஏனென்றால், morgue keeper கதை ப்ரீதம் சக்ரவர்த்தியால் மொழிபெயர்க்கப்பட்டு தெஹல்காவில் வெளிவந்தது.  அதுவும் தெஹல்காவின் சிறப்பு மலரில்.  மொழி நன்றாக இல்லாவிட்டால் தெஹல்காவில் வரும் சாத்தியம் இல்லை.  திர்லோக்புரி கதையும் ப்ரீதம் சக்ரவர்த்தியால்தான் மொழிபெயர்க்கப்பட்டது.  அவர்தான் ஸீரோ டிகிரியையும் மொழிபெயர்த்தவர்.   ஸீரோ டிகிரியின் மொழிபெயர்ப்பு எல்லோராலும் கொண்டாடப் படுகிறது.  தொகுப்பில் உள்ள Message Bearers from the Stars and Necrophilia மற்றும் Nano-வை மொழிபெயர்த்தது ராஜேஷ்.  அந்த இரண்டு கதையையும் யாராலுமே மொழிபெயர்க்க முடியாது என்று நினைத்தேன்.  நேநோ the four quarters magazine இல் வெளிவந்த போது அதன் மொழிபெயர்ப்பு மிக இயல்பாகவும், மொழிபெயர்ப்பு என்றே தெரியாதபடியும் இருந்ததாகப் பலராலும் சிலாகிக்கப்பட்டது.  இப்போது ராஜேஷ் கர்னாடக முரசு கதையை மூன்று மாதமாக வைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்.  ஆமாம்.  ஒருநாள் நான் அது பற்றி விசாரித்த போது “நரகத்தில் அமர்ந்து கத்தியால் உடம்பைக் கிழித்துக் கொண்டு ரத்தத்தை நக்கிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது” என்றார்.  கர்னாடக முரசுவை மொழிபெயர்ப்பது அப்படி இருக்கிறதாம். Transgressive writing ஐ மொழிபெயர்ப்பது அப்படித்தான் இருக்கும்.
எழுதுவதோ மொழிபெயர்ப்பதோ ஒரு masochist வேலைதான்.  அதனால்தான் நான் கணினியில் எழுத்துக்களைத் தட்டினாலும் என் தசையையும் ரத்தத்தையுமே எரித்து எழுதுவது போல் தோன்றுகிறது.  அப்பேர்ப்பட்ட வலி தரும் வேலை இது.  அதனால்தான் அவ்வப்போது குடிக்கவும் வேண்டியிருக்கிறது.  ஆனால் இதையே ஒரு வாசகன் படிக்கும் போது அவனுக்கு அது இன்பம். அந்த வகையில் ஒரு வாசகன் sadist-ஆகத்தான் இருக்க முடியும்.  என் துன்பம் அவனுக்கு இன்பம். அதனால்தான் எழுத்தையும் வாசிப்பையும் sado-masochist act என்று சொல்வார்கள்.
நிலைமை இப்படி இருக்க போகிற போக்கில் மொழிபெயர்ப்பு மோசம் என்றால் அதை எப்படி நான் அபிப்பிராயமாக எடுத்துக் கொள்ள முடியும்.  அது ஒரு அவதூறு அவ்வளவுதான்.  அவதூறு செய்பவர்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்.  எனவே இதை விட்டு விட்டு இன்னொரு காமெண்டுக்கு வருவோம்.  என் நண்பரும் என் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவருமான கண்ணன் ”Translation could have been better for some stories..” என்று எழுதியிருக்கிறார்.  இதை அவர் என்னிடம் தனிப்பட்ட முறையில்தான் சொல்லி இருக்க வேண்டும்.  இப்படி ஒரு பொதுமேடையில் எழுதியிருக்கக் கூடாது.  ஏனென்றால், என்னுடைய ஒரு குறுநாவலை எக்ஸ் என்ற நண்பர் மொழிபெயர்த்தார்.  இதை நான் கண்ணனிடம் கொடுத்து எடிட் செய்து தரச் சொன்னேன்.  உடனே கண்ணன் “மொழிபெயர்ப்பு சரியில்லை” என்று சொல்லி தானே மொழிபெயர்த்தார்.  ஆனால் எக்ஸின் மொழிபெயர்ப்பை விட கண்ணனின் மொழிபெயர்ப்பு சிறந்தது என்று சொல்ல முடியாததாக இருந்தது.  எக்ஸுக்கு 50 மதிப்பெண் என்றால் கண்ணனுக்கும் 50 தான் கொடுக்கலாம்.  எக்ஸின் மொழிபெயர்ப்பில் சில இடங்கள் தட்டையாக இருந்தது என்றால் கண்ணனின் மொழிபெயர்ப்பிலும் சில இடங்கள் தட்டையாக இருந்தன.  நான் இரண்டையுமே ஒரு கலவையாகச் சேர்த்து உருவாக்கி அனுப்பினேன்.  இப்படி இரண்டையும் கலந்தது எனக்கு மிகப் பெரிய பளுவாகி விட்டது.  இதற்குப் பேசாமல் எக்ஸின் மொழிபெயர்ப்பை நானே எடிட் செய்திருக்கலாம்.  கண்ணனிடம் கொடுத்ததால் இரட்டிப்பு வேலை ஆகி விட்டது.  ஒரு மொழிபெயர்ப்பு சரியில்லை என்று சொல்பவர் அதை விட நன்றாக அல்லவா செய்ய வேண்டும்?
Morgue Keeper மொழிபெயர்ப்பு இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்றால் ஆங்கிலம் மிக நன்றாகத் தெரிந்த கண்ணனே என்னுடைய ஏதேனும் ஒரு நாவலை எடுத்துச் செய்திருக்கலாமே?
ஆனால், மாறாக, எனக்குக் கண்ணன் கொடுத்தது மன உளைச்சலைத்தான்.  கண்ணனின் ஆங்கிலத்தைப் பார்த்துத் திருப்தி கொண்ட நான், ராஸ லீலாவை மொழிபெயர்க்கிறீர்களா என்று கேட்டேன். சரி என்றார்.  ராஸ லீலா ஒரு பிரதியை வாங்கி 5000 ரூ. செலவு செய்து குரியரில் அனுப்பினேன். இப்படி மொழிபெயர்ப்பாளர்களுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுப்பதற்கென்று எனக்கு ஒரு தோழி இருக்கிறார்.  இப்போது கூட தேகம் மூன்று பிரதிகள், ராஸ லீலா மூன்று பிரதிகள் வேண்டும் என்று தோழியிடம் கேட்டிருக்கிறேன்.  அவர்தான் ஆர்டர் கொடுத்து எனக்கு வாங்கிக் கொடுப்பார்.  ப்ளூடார்ட்டில் அனுப்பினால் ஓரிரு தினங்களில் கிடைத்து விடும்.  ஆனால் ஒரு புத்தகத்துக்கே மூவாயிரம் நாலாயிரம் என்று செலவாகும். கண்ணனிடமிருந்து புத்தகம் கிடைத்தது என்ற செய்தி வந்தது.  அவ்வளவுதான்.  அதற்குப் பிறகு கிணற்றில் போட்ட கல்.  மொழிபெயர்ப்பு நடக்கிறதா இல்லையா என்று ஒரு தகவலும் இல்லை.  மாதங்கள் கடந்தன.
ஏற்கனவே ஒரு நண்பர் ராஸ லீலாவை மொழிபெயர்க்கிறேன் என்று இரண்டு ஆண்டுகளைக் கடத்தினார்.  இரண்டு ஆண்டுகளில் நடந்தது 70 பக்கம்.  பிறகு இரண்டு ஆண்டுகள் எதுவுமே நடக்காமல் கழிந்தன.  பிறகுதான் கண்ணன்.  அவரிடமிருந்தோ மாதக் கணக்கில் தகவலே இல்லை.  காத்திருந்து பார்த்துப் பொறுமையிழந்த நான் ஒருநாள் “நாவலை வேறு யாரிடமேனும் கொடுத்து விடவா?” என்று கேட்டு எழுதினேன்.
இங்கே என்னுடைய நிலையையும் நீங்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.  என் கால் தூசு பெறாத நாவல்கள் எல்லாம் ஏஷியன் மேன் புக்கர் நாவலைப் பெற்றுக் கொண்டு போகின்றன.  நோபல் பரிசு பெற்ற Elfriede Jelinek-இன் நான்கு நாவல்களை நான் படித்திருக்கிறேன்.  அந்த நான்குமே ராஸ லீலாவின் பக்கத்தில் கூட வர முடியாது.  சமீபத்தில் சீனாவில் மூன்று கோடி பிரதிகள் விற்ற, ஏஷியன் மேன் புக்கர் பரிசு பெற்ற wolf totem நாவலைப் படித்தேன்.  சுமார் 1000 பக்கங்கள்.  ஒரே வாரத்தில் வேறு எந்த வேலையும் செய்யாமல் படிக்க வைத்த நாவலாக இருந்தாலும் அதை நான் நாவல் என்ற பிரிவிலேயே சேர்க்க மாட்டேன்.  ஓநாய்களைப் பற்றிய ஒரு சுவாரசியமான ஆய்வு.  நேஷனல் ஜியாக்ரஃபிக் பார்த்தது போல் இருந்ததே தவிர அந்த நாவல் இலக்கிய அனுபவம் எதையும் நல்கவில்லை.  அதோடு, அதில் இருந்த ஃபாஸிஸமும் இனவாதமும் வேறு சகிக்க முடியவில்லை.  சீன இனமே முட்டாள் இனம்; அடிமை இனம்.  மங்கோலிய இனம் தான் உலகிலேயே உசந்த இனம்; இத்யாதி, இத்யாதி.  இப்படி நான் ஒரு நீண்ட பட்டியலைத் தர முடியும்.  இப்படி சராசரியான நாவல்கள் எல்லாம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறும் போது தமிழில் எழுதும் ஒரே காரணத்துக்காக ஆயிரம் பேருக்குள்ளேயே அடங்க வேண்டுமா என்பதுதான் என் ஆதங்கம்.  அதனால்தான் நான் மொழிபெயர்ப்பாளர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.
இப்போது மீண்டும் கண்ணனுக்கு வருவோம்.  வேறு யாரிடமாவது கொடுத்து விடவா என்று கேட்டவுடன் இந்த வார முடிவுக்குள் ஒரு அத்தியாயம் அனுப்பி விடுகிறேன் என்ற பதில் வந்தது.  எனக்கு மிகவும் சோர்வாகவும் அலுப்பாகவும் இருந்தது.  அந்தப் புத்தகமோ 650 இருக்கிறது.  இப்படி நாலு பக்கம் வாங்குவதற்குள் என் நாக்கில் நுரை தள்ள வைக்கிறாரே, காரியம் ஆகுமா என்ற சம்சயமும் பதற்றமும் ஏற்பட்டது எனக்கு.  அந்த வார இறுதியில் அத்தியாயத்தில் பாதி வந்தது. மீதியை ஓரிரு நாளில் அனுப்புவதாக எழுதியிருந்தார்.  அதற்கு மேல் எனக்கு நம்பிக்கை போய் விட்டது.  மொழிபெயர்ப்பு நடக்கிறதோ இல்லையோ, எனக்குத் தகவல் தெரிய வேண்டாமா?  வேலை எந்த நிலையில் இருக்கிறது, உங்களால் முடியுமா முடியாதா, வேலை நடக்குமா இல்லையா?  எதுவுமே தெரியாமல் நான் எத்தனை மாதம் காத்திருப்பது?  தகவல் பரிமாற்றத்தில் பூஜ்யமாக இருந்தால் ஒருவருக்கொருவர் எப்படி இணைந்து வேலை செய்வது?
அதற்குப் பிறகு நான் கண்ணனை மறந்து போனேன்.  சில மாதங்கள் கழிந்தன.  இடையில் ஐரோப்பாவிலிருந்து சென்னை வந்து போனார். என்னையும் சந்தித்தார் கண்ணன்.  எனக்கு மிக மிக மலிவான ஒரு சாக்லெட் பாக்கெட் கொடுத்தார். (அதை நான் என் வீட்டுப் பணிப்பெண்ணிடம் கொடுத்து விட்டேன்).  அவ்வளவு மலிவான சரக்குகளை நான் உண்பதில்லை.  சற்று எரிச்சல் அடைந்தேன்.  கையை வீசிக் கொண்டு என்னை வந்து சந்திக்கலாம்.  எந்தப் பிரச்சினையும் இல்லை.  இப்படி யாரும் என்னை மலினப்படுத்தலாகாது.  “இதோ உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லி யாரும் ஒரு குவார்ட்டர் ஓல்ட் மாங்க் பாட்டிலை எனக்குத் தருவீர்களா?  அதிலும் ஐரோப்பாவிலிருந்து வந்து?  முன்பெல்லாம் என்னை சந்திக்கும் நண்பர்கள் ஜானி வாக்கர் விஸ்கியை லண்டனிலிருந்து வாங்கி வந்து கொடுப்பார்கள்.  அடக் கடவுளே என்று நினைத்துக் கொள்வேன்.  இங்கே ஜெமினி காம்ப்ளெக்ஸில் 1000 ரூபாயை விட்டெறிந்தால் ஜானி வாக்கர் கிடைக்கும்.  பிறகு ஜானி வாக்கர் கொடுத்தால் மறுக்க ஆரம்பித்தேன்.  இப்போது ஜானி வாக்கர் பிரச்சினை இல்லை.  சாக்லெட் ஆரம்பித்துள்ளது.
பெரியவர்களுக்கோ, குழந்தைகளுக்கோ, நம் பிரியத்துக்குரியவர்களுக்கோ இஷ்டப் பொருட்களை வாங்கிக் கொடுக்கக் கூடாது என்று சொல்லும் முட்டாள் அல்ல நான்.  நல்லதாக வாங்கிக் கொடுங்கள் என்கிறேன்.  விமான நிலையங்களின் duty free கடைகளைப் பார்த்தால் சொர்க்க லோகம் போல் இருக்கிறது.  சாக்லெட்டுகளிலேயே நூறு ரகம்.  மதுபானங்களில் ஆயிரம் ரகம்.  ஒரு சாக்லெட்டில் அதன் உள்ளேயே ஆல்கஹால் இருக்கிறது.  Bailey’s என்று ஒரு அற்புதமான மதுவகை.  சீனத்துத் தேனீர்ப் பைகள்.  ஆயிரம் ஆயிரம்.
சரி.  விஷயத்துக்கு வருகிறேன்.  கண்ணனுடன் மீண்டும் ராஸ லீலா பற்றிப் பேச்சு.  அவரோடு அவர் மனைவியும் சேர்ந்து மொழிபெயர்ப்பு செய்வதால் இன்னொரு ராஸ லீலா பிரதியை வாங்கிக் கொடுத்தேன்.  மீண்டும் தோழி தான் வாங்கிக் கொடுத்தார்.  ஊருக்குப் போனார் கண்ணன்.
முடிந்தது கதை.  மீண்டும் அதே விதமாக ஒரு தகவலும் இல்லை.  ஐந்து மாதமா, நான்கு மாதமா நினைவில்லை.  கண்ணனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை.  அப்போதுதான் நான் என் மொழிபெயர்ப்பாளர்களின் காலில் விழுகிறேன் என்று எழுதினேன்.  அப்படியும் தகவலே இல்லை.  நானும் வீராப்பாக விட்டு விட்டேன்.  ஆனால் இப்படியே போனால் அந்த அற்புதமான நாவலை யார்தான் மொழிபெயர்ப்பது?  ஆண்டுகள் போனால் ஏஷியன் மேன் புக்கருக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ அனுப்பவே முடியாது.  இப்போது ஸீரோ டிகிரியை அனுப்ப முடியாததைப் போல.  கண்ணனை இனி மறந்து விடலாம் என்று முடிவு செய்தேன்.  அதே நேரத்தில் டாக்டர் ராமானுஜம் தேகம் நாவலை முடித்திருந்தார்.  அவரை சந்தித்து ராஸ லீலா முடியுமா என்று கேட்டேன்.  பெரிய நாவல்.  மெதுவாகச் செய்யுங்கள்; ஆனால் நீண்ட இடைவெளி இல்லாமல் ரெகுலராகச் செய்தால் ஒரு ஆண்டில் அல்லது ஒன்றரை ஆண்டில் செய்து விடலாம் என்றேன்.  ஒப்புக் கொண்டார்.  எதற்கும் கண்ணனையும் கேட்டு விடலாம் என்று கடிதம் எழுதினேன்.
பணி நிமித்தமாக வேறு தேசத்துக்குப் போய் விட்டதால் மொழிபெயர்ப்பு செய்ய முடியவில்லை.  மார்ச்சில் ஆரம்பித்து விடலாம் என்று பதில் வந்தது.  உண்மையில் எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை.  இந்தத் தகவலை அவராக அல்லவா அனுப்பி இருக்க வேண்டும்?  அந்தப் பொறுப்பு கூட ஒருவருக்கு இல்லையா?  சின்ன வயதில் என் குப்பத்தில் பொது இடத்தில்தான் மலம் கழிக்க வேண்டும்.  நாம் முக்கி முக்கிப் போடும் மலத்துக்காக நம் குண்டிக்குப் பின்னாலேயே பசி வெறியுடன் நின்று கொண்டிருக்கும் பன்றியைப் போல் ஒரு எழுத்தாளனை ஆக்கலாமா?  நீங்களாக அல்லவா நிலைமையை எனக்குத் தெரிவிக்க வேண்டும்?  அப்போதும் நான் கண்ணனுடன் கோபம் காண்பிக்கவில்லை.  கிடைப்பது தானம். பல்லைப் பார்க்கக் கூடாது.  அவரிடம் விஷயத்தைச் சொல்லி நீங்கள் இரண்டாம் பாகத்தைச் செய்யுங்கள் என்றேன்;  அவர் செய்ய மாட்டார் என்ற தைரியத்துடன்.
இப்படிப்பட்டவர்தான் morgue keeper மொழிபெயர்ப்பு இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்கிறார்.  சரி கண்ணன்.  நீங்கள் சொல்வது முழுக்க சரி.  ஆனால் இதை நீங்கள் பொது வெளியில் எழுதலாமா?  ஆயிரம் பேர் படிக்கும் இடம் அது.  அதிலும் நான் எங்கே சென்றாலும் அங்கே போய் என்னைப் பற்றி அவதூறு எழுத ஒரு டஜன் பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படிப்பட்ட இடத்தில் போய் நீங்கள் உண்மை விளம்பலாமா?  நீங்களே இப்படி எழுதினால் பிறகு யார் என்னை மொழிபெயர்க்க வருவார்கள்?  ஏற்கனவே எல்லோரும் “என் ஆங்கிலம் ஒன்றும் அவ்வளவு நன்றாக இருக்காது” என்ற அதைர்யத்துடன் வருகிறார்கள்.  அவர்களைப் போய் மிரட்டினால் யார் மொழிபெயர்க்கத் துணிவார்கள், சொல்லுங்கள்?
இதை நீங்கள் வெளியே, பொது இடத்தில் எழுதியதால்தான் நானும் பொது இடத்தில் எழுத நேர்ந்தது.
என் நாவல்களின் மொழிபெயர்ப்பு ஆகா ஓகோ என்று இருக்காது.  ஆனால் நிச்சயமாக மோசமாக இருக்காது.  சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு எவ்வளவு மொக்கையாக இருந்தது என்று எழுதியிருந்தேன். மொழிபெயர்த்தவர் பெரிய ஆங்கிலப் பேராசிரியர்.  ஆனால் படைப்பாளி அல்ல.  மேலும், சு.ரா. அதைப் படித்திருக்க மாட்டார். பெரும்பாலான தமிழ் நாவல்களின் மொழிபெயர்ப்பு அப்படித்தான் உள்ளது.  அதனால்தான் சமகாலத் தமிழ் இலக்கியம் உலக அரங்கில் தோற்றுக் கொண்டிருக்கிறது.  ஒலிம்பிக்ஸில் நாம் வாங்கும் ஒரே ஒரு வெண்கல மெடலை விடக் கேவலமாக இருக்கிறது தமிழ் இலக்கியத்தின் சர்வதேச சாதனை!
என் அமெரிக்க நண்பர் ஒருவர் சொன்னார்.  அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி என்று யாரையுமே மொழிபெயர்ப்பில் படிக்க முடியவில்லை என்றார்.  ஒரே விதிவிலக்கு ஆதவன்.  அப்படியானால் நான்? என்றேன் பதற்றத்துடன்.  ”உங்களை நான் தமிழ் எழுத்தாளராகவே நினைக்கவில்லையே?” என்ற பதிலைக் கேட்டதும்தான் நிம்மதி அடைந்தேன்.
இதுதான் நிலைமை.  என்னுடைய மொழிபெயர்ப்பாளர்கள் யாரும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றுபவர்கள் அல்ல.  ஸாஃப்ட்வேர் துறையில் பணியாற்றும் நண்பர்கள் அவர்கள்.  என் எழுத்தின் மீது உள்ள அபிமானத்தால் மட்டுமே தங்களின் நேரத்தை எனக்கு தானமாகத் தருகிறார்கள்.  ஒரு நண்பர் மிக அமைதியாக காமரூப கதைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்.  இன்னொரு நண்பர்… அவரோடு நான் போனில் கூடப் பேச முடியாது. எந்நேரமும் வேலை.  தலைமைப் பொறுப்பில் இருப்பவர்.  வீட்டுக்கே ஒன்பது மணிக்குப் போய் இரவு ஒரு மணி வரை மொழிபெயர்க்கிறார்.  ஷிவா என்று பெயர்.  எக்ஸைலை முடிக்க ஒரு கால அட்டவணையே போட்டு இருக்கிறார்.  அதன்படி மார்ச் 31-ஆம் தேதி எக்ஸைல் மொழிபெயர்ப்பு முடியும்.  சீராக ஒவ்வொரு வாரமும் ஷெட்யூலில் உள்ள பக்கங்களை விட அதிகமாகவே அனுப்புகிறார்.  அவருக்கும் குடும்பம் இருக்கிறது; குழந்தை இருக்கிறது.  உறவினர்கள் இருக்கிறார்கள்.  கல்யாணம் காட்சி இருக்கிறது.  இவ்வளவு குடும்பக் கடமைகளோடு கூடவே தான் மொழிபெயர்ப்பும் நடக்கிறது.  என் எழுத்தின் மீது உள்ள அபிமானம் மட்டுமே காரணம்.
ஸாம் என்று ஒரு வாசகர்.  தேகம் நாவலை என்னிடம் சொல்லாமலேயே ஒரே மாதத்தில் மொழிபெயர்த்து முடித்து விட்டார்.  இப்போது டாக்டர் ராமானுஜத்தின் பிரதியையும் ஸாம் பிரதியையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் காயத்ரி.  அவருக்கும் ஆயிரம் வேலை.  சமையல் வேலை, கல்லூரி வேலை, கணவர் வேலை, குழந்தை வளர்ப்பு, இத்யாதி இத்யாதி.
ஓரான் பாமுக் துருக்கி மொழியில்தானே எழுதுகிறார்?  மொழிபெயர்ப்புக்கு அவர் இப்படியா நக்கிக் கொண்டிருக்கிறார்?  மரியோ பர்கஸ் யோசா 15 நாவல்களை எழுதி விட்டார்.  ஒவ்வொன்றும் 500 பக்கம்; 1000 பக்கம்.  மொத்தம் 20,000 பக்கங்கள் இருக்கும்.  என்ன அற்புதமான மொழிபெயர்ப்பு தெரியுமா?  இரண்டு காரணங்கள்.  யோசாவின் புத்தகங்கள் கோடிக் கணக்கில் விற்பதால் அவர் ஒரு மில்லியனராக இருக்கிறார்.  இரண்டு, அங்கே ஆங்கிலமும் ஸ்பானிஷும் தெரிந்தவர்களுக்கு இலக்கியமும் தெரிந்திருக்கிறது.  அதனால் தொழில்முறையில் மொழிபெயர்ப்பு நடக்கிறது.  ஸாஃப்ட்வேர் துறையில் பணியாற்றிக் கொண்டே யாரும் அவரை நள்ளிரவில் கண் விழித்து மொழிபெயர்க்கவில்லை.  ஓரான் பாமுக்கின் Snow படித்தேன்.  அற்புதமான மொழிபெயர்ப்பு.  அம்மாதிரியான மொழிபெயர்ப்பை நான் எப்படி எதிர்பார்க்க முடியும்?  அங்கே அதற்காக பதிப்பகமே லட்சக் கணக்கில் செலவழிக்கிறது.  எந்த எழுத்தாளனும் தன் மொழிபெயர்ப்புக்குத் தானே ஏற்பாடு செய்வதில்லை.  இது அவலம்தான்.  ஆனால் இந்த அவலத்துக்குக் காரணம், நானோ என் மொழிபெயர்ப்பாளர்களோ அல்ல.  தமிழ்ச் சூழல்தான் காரணம்.  இங்கே ஆங்கிலம் தெரிந்த பலருக்கும் தமிழ் தெரியவில்லை. ஆங்கிலமும் தமிழும் தெரிந்தவர்களுக்கு இலக்கியமே தெரியவில்லை.  இலக்கியம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை; என் எழுத்தில் கூட பரிச்சயம் இல்லை.  என் எழுத்தில் கூடப் பரிச்சயம் இல்லாமல், அசோகமித்திரன் ஆதவன் என்ற பெயர்கள் கூடத் தெரியாமல் எப்படி மொழிபெயர்க்க முடியும்?  பிரமாதமாக ஆங்கிலம் எழுதுகிறார்கள். ஆனால் என்னுடைய ஒரு பத்தியைக் கொடுத்து செய்யச் சொன்னால் படு கேவலமாக இருக்கிறது.  அதனால்தான் ஆங்கிலம் தெரிந்த என் வாசகர்களே இந்தப் பணியில் இறங்கி இருக்கிறார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம்.  என் மொழிபெயர்ப்புகளில் தவறுகளே இருக்காது.  ஒவ்வொரு வார்த்தையாக நான் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  அதனால்தான் சாருஆன்லைனில் அதிக எழுத முடியவில்லை.  இப்போது தேகத்தில் கூட ஒரு பிழை பார்த்தேன்.  தமிழில் வர்க்க எதிரிகள் என்று ஒரு வார்த்தை வருகிறது.  அது ஒரு மார்க்ஸீய சித்தாந்த வார்த்தை.  ஆங்கில மொழிபெயர்ப்பில் தவறாக இருந்தது.  நான் அதை class enemies என்று மாற்றினேன்.  மொழிபெயர்ப்பாளர்களுக்கு மார்க்ஸீய சித்தாந்தம் சார்ந்த terminology தெரியவில்லை.  நானே ஒவ்வொரு வார்த்தையாகப் பார்த்துக் கொண்டிருப்பதால் இது ஒன்றும் பிரச்சினை இல்லை.
இவ்வளவுக்கும் இடையில் இன்னொரு பிரச்சினை என்ன தெரியுமா?  ஒருவரின் மொழிபெயர்ப்பைப் படித்தால் இன்னொரு மொழிபெயர்ப்பாளருக்கு வாந்தி வருவது போல் இருக்கிறது.  இவருக்கோ ஆங்கிலமே தெரியவில்லை என்கிறார் முன்னவர்.  இப்படி ஒருவரின் மொழிபெயர்ப்பு இன்னொருவருக்குப் பிடிக்கவில்லை.  இந்த ரெண்டு பேருமே டோட்டல் வேஸ்ட் என்பது கண்ணனின் கருத்து.  என்ன செய்வது கண்ணன்?  இப்படி நொட்டு நொள்ளை சொல்லிக் கொண்டிருந்தால் காரியம் ஆகாதே?  நான் கூட இருந்து செய்யும் வரை எந்த மொழிபெயர்ப்பும் சோடை போகாது என்பது என் கருத்து.  அந்த அளவுக்கு எனக்கு ஆங்கிலம் தெரியும்.
சமீபத்தில் நான் ஹைதராபாத் சென்றிருந்தேன்.  ஓய்வுக்கு என்று சொல்லி விட்டு அங்கே போய் கோணல் பக்கங்களைத்தான் ப்ரூஃப் ரீடிங் செய்து கொண்டிருந்தேன்.  அப்போது என் நண்பரும் மலையாள மொழிபெயர்ப்பாளருமான ஜெயேஷை சந்தித்தேன்.
எக்ஸைல் வெளிவந்து ஒரு ஆண்டு நிறைவடைகிறது.  அவர் அதை மலையாளத்தில் மொழிபெயர்த்து ஆறு மாதம் ஆகிறது.  அடுத்த இரண்டு மாதங்களில் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் மொழிபெயர்ப்பை முடித்து விட்டார்.  அவர் ஒரு வாக்கியம் சொன்னார்.  என்னவென்றால்… எக்ஸைல் என்னுடைய சமீபத்திய ஆக்கம்.  என் 57-ஆவது வயதில் எழுதியது.  எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என் முதல் நாவல்.  என் 27-ஆவது வயதில் எழுதியது.  முப்பது ஆண்டுகளின் இடையே கால எந்திரத்தில் போய் வந்தது போல் இருக்கிறது என்றார் ஜெயேஷ்.  யோசித்துப் பாருங்கள் இதை.  முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதையும் இப்போது எழுதியதையும் ஒருவர் ஒரே சமயத்தில் மொழிபெயர்ப்பதன் அனுபவம் எப்படி இருக்கும்?
இது ஒரு மனிதரால் சாத்தியமா?  மொத்தம் 600 பக்கங்கள்.  எட்டு மாதங்கள்.  அவருக்கு இரவு நேரப் பணி.  பணி முடிந்து காலையில் ஆறு மணிக்கு வீட்டுக்கு வருவார்.  மொழிபெயர்ப்பைத் துவங்குவார்.  பக்கத்தில் மதுக் கோப்பை.  சாப்பாடு கூட இல்லாமல் மதியம் வரை மொழிபெயர்த்து விட்டு, அதற்கு மேல் சமைத்து சாப்பிட்டு விட்டு, சிறிது தூங்கி விட்டு, இரவு வேலைக்குக் கிளம்பி விடுவார்.  ஜெயேஷ் அடிக்கடி புகைக்கும் பழக்கம் உள்ளவர்.  ஜெயேஷோடு கூட வந்த நண்பர் சொன்னார் என்னிடம்.  ”மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கும் போது “சிகரெட் தீர்ந்து விட்டது; வா, வெளியே போய் சிகரெட் வாங்கி வரலாம்” என்று கூப்பிட்டால் கூட வர மாட்டார் இவர்” என்றார் அவர்.  அந்த அளவுக்கு ஒரு வெறியோடு முடித்திருக்கிறார் ஜெயேஷ்.
ஜெயேஷை அடுத்த நாளும் சந்திப்பதாகச் சொல்லியிருந்தேன்.  கோணல் பக்கங்கள் வேலையில் மூழ்கி விட்டதால் சொன்னபடி போய் சந்திக்க முடியவில்லை.  மறுநாளும் அப்படியே.  “என்னைத் தவிர்க்கிறீர்களா?’ என்று கேட்டு ஜெயேஷிடமிருந்து குறுஞ்செய்தி.  அவரைப் போலவே நானும் வெறித்தனமாக வேலை செய்வேன்.  அதுதான் காரணம் ஜெயேஷ்.  தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்.  இவர்களுக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?  இலக்கிய வரலாறு இவர்களின் பெயரைச் சொல்லும்.
எனவே,
இனி என்ன எழுத?  என் மொழிபெயர்ப்பாளர்களைப் பற்றிக் குறைவாகச் சொன்னதால் எனக்குக் கோபம் இல்லை.  அதைப் பொதுவெளியில் சொன்னதால்தான் இதை எழுதினேன்.  கூபாவில் புரட்சி முடிந்த கையோடு பல எதிர்ப்புரட்சியாளர்கள் அரசை அமெரிக்க ஆதரவோடு விமர்சித்த போது ஃபிடல் சொன்னார்.  புரட்சிக்கு உள்ளே – everything; புரட்சிக்கு வெளியே – nothing என்று.  அதாவது, நமக்குள்ளே எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சியுங்கள்; வெளியே போய் சொன்னால் உள்ளே தள்ளி விடுவேன் என்று பொருள்பட அப்படிச் சொன்னார்.  அது உண்மையும் கூட. தொமாஸ் அலியாவின் ஒரு படத்தில் ஃபிடலை நேரடியாகப் பெயர் சொல்லி ஃபிடல் ஒரு முட்டாள் என்பாள் ஒரு பெண்.  தணிக்கையில் அதை வெட்டவில்லை.  எனவே, கண்ணன் இந்த விஷயத்தை உள்ளே சொல்லி இருக்க வேண்டும்.
மேலும்,
இன்று corpus வேலையை முடித்து விட்டு கண நேர இளைப்பாறலின் போது நாட்டு நடப்பு என்ன என்று தெரிந்து கொள்வதற்காக உத்தமத் தமிழ் எழுத்தாளனின் ப்ளாகைத் திறந்த போது அதிர்ந்து போனேன்.  தமிழில் ஒரு எழுத்தாளன் என்றால் என்னென்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது?  தேவதேவனுக்கு விருது.  விருது வழங்குபவர் இளையராஜா.  இளையராஜாவை வரவழைக்க அவரோடு நட்பு.  சென்னை வரும் போது அவரோடு சந்திப்பு.  சிரிப்பு. கும்பிடு.  தேவதேவனைப் பற்றிய ஒரு மதிப்புரை நூல் எழுதி அதையும் வெளியிட வேண்டும்.  பகவானே!  ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய வேலையை, பணியை, சேவையை ஒரே ஒரு எழுத்தாளன் செய்து கொண்டிருக்கிறான்.  என்னால் இதைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.  Corpus வெளியீட்டு நிகழ்வுக்கு ப்ரியங்கா சோப்ராவை அழைக்கலாமா என்றார் அராத்து.  ஆளை விடுங்கள் என்று தவிர்த்து விட்டேன்.  ஏஷியன் ஏஜில் எழுதுவதால் மும்பை சினிமா ஆட்கள் என்னை நேரடியாக அறிவர்.  ஃபோனிலும் தொடர்பு கொள்வர்.  நீங்கள் இன்று மும்பையில் இருந்தால் இன்றைய காக்டெயிலில் கலந்து கொள்ளுங்களேன் என்று கூட அடிக்கடி மெஸேஜ் வரும்.  ஆனால் என்னால் முடியாது.  எனக்குத் தொழில் எழுத்து மட்டுமே.  கூட்டம் கூட்டுவது அல்ல.  முடிந்தால் நீங்கள் கூட்டுங்கள்; நான் வந்து கலந்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டேன்.  காரணம் என்ன தெரியுமா?  நான் இப்போது எக்ஸைல் மொழிபெயர்ப்பின் பிரதியில் உட்கார வேண்டும்.  ஷிவா அதிகம் வேலை வைக்க மாட்டார்.  இருந்தாலும்…
எதற்குச் சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளன் தன்னை ஸ்தாபித்துக் கொள்ள வேண்டுமானால் இப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.  சினிமா விமர்சனம், அரசியல் விமர்சனம், இசை விமர்சனம், இந்திய வரலாற்றுப் பாடங்கள், மார்க்ஸீயம் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் பற்றிய கோனார் நோட்ஸ்கள், சினிமா வசனம், இலக்கியத் திறனாய்வு, தத்துவப் பாடங்கள் இதிலெல்லாம் எக்ஸ்பர்ட்டாக இருந்தால்தான் தமிழ்நாட்டில் எழுத்தாளனாகத் தாக்குப் பிடிக்க முடியும்.  அப்போதுதான் 100 காப்பி புத்தகம் விற்கும்.  நான் மலேஷியா போயிருந்த போது கெடா மாநிலத்தில் தொல்பொருள் ஆய்வகம் கண்டுபிடித்திருந்த பழைய சோழர் காலத்துக் கோவிலின் சிதிலங்கள் இருந்த இடத்துக்குச் சென்றிருந்தேன்.  இங்கே வந்த ஜெ. இதை பௌத்த கோவில் என்றார்; சில ஆதாரங்களையும் காண்பித்தார் என்றார் கூட வந்த பாலமுருகன்.  பயத்தில் எனக்கு ஒன்றுக்கே வந்து விட்டது.  தொல்பொருள் ஆராய்ச்சியிலுமா?  நம்மால் ஆகாது சாமி என்று ஓடி வந்து விட்டேன்.  ஒரு எழுத்தாளன் எதிலெல்லாம் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டியிருக்கிறது பாருங்கள்!
வருஷாவருஷம் புத்தக விழாவின் போது ஒரு நாவலைக் கொண்டு வந்தால்தான் உங்களை ஞாபகம் வைத்திருப்பார்கள் என்றார் அராத்து.  ப. சிங்காரம்னா யாருன்னு கேக்குறான்; இவனுங்க ந்யாபகம் வச்சுக்கிட்டு இருந்தா என்னா, இல்லாட்டி என்னா என்று கேட்டேன்.  என்னுடைய இலக்கு வேறு நண்பர்களே…
கண்ணன், உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்.  அது என் நோக்கம் அல்ல.  நாம் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறோம்; எந்தச் சூழ்நிலையில் அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சுட்டிக் காட்டவே இதை எழுதினேன்.  நான் ஜெ.யைக் கிண்டல் செய்வதற்காக மேற்கண்ட பத்தியை எழுதவில்லை.  இங்கே ஒரு எழுத்தாளன் literary activist ஆக இருக்க வேண்டியிருக்கிறது.  நானும் அதை வேறொரு தளத்தில் செய்து கொண்டிருக்கிறேன்.  எனவே மாளிகைகளில் அமர்ந்து கொண்டு எங்களை விமர்சிக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.

Sunday 28 September 2014

திரிஷா இல்லாட்டி ஓவியா!

எக்ஸைல்: த்ரிஷாவுக்கு ஒரு வேண்டுகோள்…
December 2nd, 2011
சமீபத்தில் ஷாருக் கானின் ஒரு படத்துக்காக அவர் செய்த விளம்பர யுத்திகளைப் பற்றி நண்பர்கள் ஆச்சரியத்துடனும், எரிச்சலுடனும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன்.  ஒரு நாவலுக்கும் அந்த அளவுக்கு விளம்பரம் தரப் பட வேண்டும் என்று நினைக்கிறேன்.  ஒரு நாவல் வாசிப்பில் கலந்து கொண்ட ப்ரியங்கா சோப்ரா அதன் ஒரு அத்தியாயத்தை வாசித்தது பற்றி பத்திரிகைகளில் படித்தேன்.  மும்பையில்தான் இப்படி நடக்கும்.  மலையாள சேனலில் கூட எக்ஸைல் பற்றி ஒரு மணி நேரம் கலந்துரையாடல் நடந்தது.  யோசித்துப் பாருங்கள்.  ஒரு தமிழ் நாவலுக்கு மலையாள சேனல் கொடுக்கும் மரியாதை இது.  இங்கே?
ப்ரியங்கா சோப்ரா மும்பையில் செய்வதை த்ரிஷா போன்றவர்கள் இங்கே தமிழில் செய்யலாமே?   ப்ரியங்கா சோப்ராவே தமிழ் கற்றுக் கொண்டு சென்னை வந்து இலக்கிய வாசிப்பு செய்வதெல்லாம் நடைமுறை சாத்தியமில்லாதது என்பதால் சொல்கிறேன்.  த்ரிஷாவின் தமிழை கமல்ஹாசனே பாராட்டியிருப்பதால் த்ரிஷாவுக்குக் கூடுதல் தகுதி உள்ளது.
விளம்பரம் வேண்டும்.  இல்லாவிட்டால் எக்ஸைல் என்ற நாவல் வரப் போவது பற்றி யாருக்குத் தெரியும்?  சில கல்லூரிகளில் எக்ஸைல் நோட்டீஸ் விநியோகிக்கலாம் என்று நினைத்தேன்.  கைவசம் இருந்த நோட்டீஸ்கள் தீர்ந்து விட்டன.  கல்லூரி மாணவ மாணவிகள் பலரும் இன்று சமகாலத் தமிழ் இலக்கியத்தில் பரிச்சயம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.  மனுஷ்ய புத்திரன், எஸ். ராமகிருஷ்ணன் போன்ற சிலரின் எழுத்துக்களும் அதற்கு ஒரு காரணம்.  ஆனால் இந்த இளைஞர்களுக்கு எக்ஸைல் என்ற நாவல் வெளிவர இருக்கும் செய்தியை யார் சொல்லுவது?  எப்படிச் சொல்லுவது?  இதுதான் என் அக்கறை.
தமிழின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான சீனு. ராமசாமி எக்ஸைலைப் படித்து விட்டேன்.  ட்ரைலருக்கு நான் தயார் என்று நேற்று போன் செய்தார்.  ட்ரைலர் இயக்குனர் கோவா ஃபில்ம் ஃபெஸ்டிவலில் இருக்கிறார்.  அவர் வந்ததும் சினிமா கலைஞர்களிடம் கருத்துக் கேட்டு ஒரு ட்ரைலர் தயாரிக்க வேண்டும்.
தில்லியில் நடந்த கருத்தரங்கில் எக்ஸைல் ட்ரைலர் பற்றிக்  குறிப்பிடப்பட்டுள்ளது சந்தோஷம் அளிக்கிறது.   ட்ரைலரின் நடிகை ஓவியாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.  அடுத்த ட்ரைலரில் கேட்க வேண்டும்.

Wednesday 24 September 2014

விஸ்வரூபம்

விஸ்வரூபம்

விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன்.  அதற்குப் பல காரணங்கள்.  கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம்.  இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன்.  அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது.  என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம்.  ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.
ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும்.  தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.  இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன்.  விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது.  நான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது.  அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே  கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்?  அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?  இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்?  அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள்.  ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்?  கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?  ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும்  சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான். கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை.  பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது.  அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.
இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை.  ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன்.  நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும்.  அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன்.  அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது.  வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது.  சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில்.  ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை.  ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது.  ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள்.  அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள்.  ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.
விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன.   ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம்.  மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது…
-----------------------------------------------------------------------------------

விஸ்வரூபம்

Hi Mr.Charu,
My name is Ravi Shankar and I have read few of your books including zero degree. I was deeply hurt by the comment you wrote against the movie Vishwaroobam. I have only one question for you. If the TamilNadu government appose the ‘Zero Degree’ book saying it has got sexual content and it cannot be sold to people with kids, would you still support the TN government? The point I’m making here is, I should have the freedom of speech and freedom of rights. I’m totally against censor board as well. I do not want 5 people decide what movie I can watch. Their job should only rate the movie like they do it in US. If Kamal makes a movie how RSS demolished Babri masjid and we should watch that as well.
Regards,
Ravi
டியர் ரவி,
நீங்கள் வருத்தம் அடைந்தது போல், காயப்பட்டது போல் லட்சக்கணக்கான முஸ்லீம்கள் விஸ்வரூபம் பார்த்துக் காயமடைந்து இருக்கிறார்கள்.  நான் ஒரு எழுத்தாளன் என்பதால் அந்தப் படத்தை ஒரு முஸ்லீமாகத்தான் பார்த்தேன்.  அந்தப் படத்தில் சென்ஸார் செய்வதற்கு எதுவும் இல்லை.  படம் முழுவதுமே இஸ்லாமிய விரோதப் பார்வைதான் இருக்கிறது.  ஆஃப்கனிஸ்தானில் எல்லா சிறுவர்களும் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு அலைகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அமெரிக்கா தானே?  அமெரிக்காக்காரன் தானே ரஷ்யாவை எதிர்ப்பதற்காக தாலிபான்களை வளர்த்து விட்டார்கள்?
ஒரு தமிழர் அமெரிக்க உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.   அதற்காக அவரை அறிஞர் என்று கொண்டாட முடியுமா?  மிமிக்ரி ஆர்டிஸ்ட் கூடத்தான் அப்படிப் பேசுவான்.  இல்லாவிட்டால் ஒருத்தர் அமெரிக்காவில் ஆறு மாதம் தங்கினால் அந்த உச்சரிப்புடன் பேச முடியும்.  அது ஒரு சாதனையா?  ஹாலிவுட் ஸ்டைலில் படம் எடுத்தால் அதற்குப் பெயர் சாதனையா?
இதை விடக் கொடுமை என்னவென்றால், படத்தின் ஆரம்பத்தில் பாப்பாத்திதான் சிக்கனை ருசி பார்த்து சொல்லணும் என்று வரும் வசனம்.  பாப்பாத்தி என்று சொல்வது சட்டப்படி குற்றம்.  ஒருவரை நீக்ரோ என்று சொல்வது எப்படிக் குற்றமோ அதே போன்ற குற்றம்தான் பாப்பாத்தி என்று சொல்வதும்.
என் விஸ்வரூபம் விமர்சனம் சம்பந்தமாக சுமார்  நூறு கடிதங்கள் வந்துள்ளன.   பாதி கடிதங்கள் என் கட்டுரையைப் பாராட்டி.  பாதி கடிதங்கள் என்னைக் கண்டித்து.  பாராட்டி எழுதியவர்கள் அத்தனை பேரும் முஸ்லீம்கள்.  கண்டித்து எழுதிய அத்தனை பேரும் இந்துக்கள்.  என் துபாய் நண்பர் கார்ல் மார்க்ஸ் மட்டுமே பாராட்டி எழுதிய இந்து நண்பர்.  மதத்தைத் தாண்டி சிந்திக்க முடியாத நாம் என்ன செய்து என்ன பயன்?  ரொம்பவும் அவமானமாக இருந்தது.  இந்தப் படம் பிராமணர்களையும் முஸ்லீம்களையும் எவ்வளவு கொச்சைப் படுத்துகிறது என்பதைக் கூடவா ஒருத்தரால் உணர முடியாது?  கமல் தன்னுடைய இஸ்லாமிய விரோத பார்வையை விஸ்வரூபத்தில் மட்டும் காட்டவில்லை.  ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்று ஏற்கனவே நிறைய செய்திருக்கிறார்.  அந்தப் படங்கள் பற்றிய என்னுடைய விரிவான விமர்சனங்களைப் படித்துப் பாருங்கள்.
நான் இப்போது தமிழ் சினிமாவுக்கு உள்ளே இருக்கிறேன் என்பதால் விஸ்வரூபத்துக்கு விரிவான விமர்சனம் எழுதவில்லை.  என்னால் என் நண்பர்கள் யாருக்கும் தொந்தரவு வரக் கூடாது என்று எண்ணுகிறேன்.  இனிமேல் விஸ்வரூபம் பற்றி எதுவும் எழுத மாட்டேன்.
எனக்கும் சென்ஸார் போர்டு இருக்கக் கூடாது என்பதுதான் எண்ணம்.  ஆனால் நம்முடைய நாடு அந்தப் பக்குவத்தை இன்னும் அடையவில்லை.  சென்ஸார் போர்டு இல்லாவிட்டால் 90 சதவிகிதம் நீலப் படங்கள்தான் வரும்.  வேண்டுமானால் சென்ஸார் போர்டில் சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வைக்க வேண்டாம்.
சாரு


Sunday 14 September 2014

ராஜேஷுக்கு ஒரு கடிதம்…

ராஜேஷ் என்னுடைய மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர்.  கருந்தேள் என்ற புனைப்பெயரில் எழுதுகிறார்.  எனது நீண்ட கால நண்பரும் கூட.  அதோடு தனது தந்தையைப் போல் என்னை மதிப்பவர்.  அதை அடிக்கடி அவர் என்னிடம் சொல்லியும் இருக்கிறார்.  அவர் ஆங்கிலத்தில் அற்புதமாக மொழிபெயர்த்துக் கொடுத்த என்னுடைய ”நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும்” என்ற சிறுகதையை ஒரு முக்கியமான பத்திரிகைக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.  அந்தப் பத்திரிகை ஆசிரியர் என்னிடம் கேட்டுக் கொண்டதன் பேரில்.  இதற்கிடையில் இன்னொரு முக்கியமான ஆங்கிலப் பத்திரிகையான the four quarters magazine –இலும் ஒரு கதை கேட்டு எனக்கு எழுதியிருந்தார்கள்.  ராஜேஷிடம் நேநோ சிறுகதையை மொழிபெயர்க்குமாறு சொன்னேன்.  அவரும் ஆரம்பித்தார்.  இரண்டே தினங்களில் கதையில் பாதியை முடித்து விட்டார்.  இடையில் நேற்று எனக்கு போன் பேசி “ஒரு இரண்டு நாள் கதையில் உட்கார முடியாது; மூன்றாம் நாளிலிருந்து மறுபடியும் தொடங்கி விடலாம்” என்றார்.  சரி, ஏதோ அவசர வேலை, அலுவலக வேலை, குடும்பப் பணி என்று நினைத்து நானும் கேட்டுக் கொண்டேன்.   ஆனால் வேறொரு வேலையாக இன்று அவருக்கு போன் செய்த போது ’அந்த இரண்டு நாள் வேலை என்ன?’ என்பது பற்றி விளக்கினார்.
ஏதோ ஒரு தமிழ்ச் சிறுபத்திரிகைக்கு உலக சினிமா பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொடுக்க வேண்டுமாம்; போன மாதமே வாக்குக் கொடுத்து விட்டாராம்.  ”நீங்கள் ”மிமி” பத்திரிகைக்கு மாதாமாதம் கட்டுரை எழுதும் போது கடைசி தேதியில் எழுதுவீர்களே, அந்த மாதிரி கடைசிக் கெடுவில் எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.  மிமி என்பது நான் ஒன்பதரை ஆண்டுக் காலமாக எழுதிக் கொண்டிருந்த ஒரு எத்தியோப்பியப் பத்திரிகை.  அதில் பத்தாண்டுக் காலம் தொடர்ந்து எழுதினால் எத்தியோப்பியக் குடியுரிமை க்ரீன் கார்டு கிடைக்கும்.  நான் ஒன்பதரை ஆண்டோடு சண்டை போட்டுக் கொண்டு வெளியே வந்து விட்டதால் எனக்கு அந்த க்ரீன் கார்ட் கிடைக்கவில்லை.  சரி, அதை விடுங்கள்.
இப்போது ராஜேஷுக்கு நான் தமிழ் இலக்கியவாதிகளின் வரலாற்றையே எழுத வேண்டியிருக்கிறது.  அது ஏன் ஐயா நீங்களெல்லாம் ஒரு தமிழ் எழுத்தாளனாக ஆவதில் அவ்வளவு பைத்தியமாக இருக்கிறீர்கள்?  இது என் முதல் கேள்வி.
அந்தக் குறிப்பிட்ட சிறுபத்திரிகை எத்தனை பிரதிகள் போகும் என்றேன்.  ஒரு 200 என்றார்.  அடப் பாவிகளா…  இந்த இண்டர்நெட் யுகத்திலும் 200 பிரதி போகும் சிறுபத்திரிகையா?  என்னைப் பொறுத்தவரை இண்டர்நெட்டின் வருகைக்குப் பிறகு சிறுபத்திரிகை என்பதே அர்த்தமில்லாமல் போய் விட்டது.  உங்களுக்கு என்ன விபரம் வேண்டுமோ அது எல்லாமே இண்டர்நெட்டில் கொட்டிக் கிடக்கிறது. அகிரா குரஸவா பற்றி ஆயிரம் பக்கத்தில் ஒரு புத்தகம் எழுத வேண்டுமா?  இதோ இரண்டு நிமிடத்தில் 2000 பக்கங்களை டவுன்லோடு செய்து விடலாம்.  இந்த நிலையில் எந்தப் படத்தைப் பற்றி எதை எழுத?  சரி, 50 லட்சம் பேர் படிக்கும் ஜூனியர் விகடனில் எழுதினாலாவது ஒரு புகழ் கிடைக்கும்.  ஆனால் நீங்களோ 200 பேருக்காக எழுதுகிறீர்கள்.  சரி, ஜூவியில் எழுதினால் கிடைக்க்கும் புகழிலும் ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது.  நீங்கள் ஏதாவது ஒரு பெண்ணிடம் சாட் செய்தால் அது பத்திரிகைகளில் வெளிவந்து உங்களை ஏதோ செக்ஸ் கிரிமினல் லெவலுக்கு ஆக்கி விடுவார்கள்.  இதைத் தவிர வேறு என்ன கிடைக்கும் சொல்லுங்கள் ராஜேஷ்?  அஜயன் பாலா விகடனில் எழுதியதால் தமிழ்நாடு முழுவதும் பிரபலம் ஆனாரே என்று சொல்கிறீர்களா? அது ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம் ஜனாதிபதி ஆன மாதிரி ஒரு அதிர்ஷ்டம்.  மற்றபடி நீங்கள் விகடனில் எழுதினாலும் பயன் இல்லை.
எனக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கிறது.  தமிழ் எழுத்து என்பது ஒரு ஆவிகள் உலவும் புளியமரம்.  இதன் பக்கத்தில் போனாலே ஆள் ரத்த வாந்தி எடுத்து செத்து விடுவான்.  பாரதி செத்தார்; கு.ப.ரா. செத்தார்; புதுமைப்பித்தன் செத்தான்; சமீபத்தில் கோபி கிருஷ்ணன்.  35 வயதுதான் அதிக பட்சம்.  கோபிக்கு மட்டுமே கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்தது.  இப்படிப்பட்ட புளிய மரத்தில் வாசம் செய்ய வேண்டும் என்று எவனுக்காவது ஆசை வருமா?  நேற்று ஒரு சீனியர் சினிமா நடிகர் ஒருவர் “என் கவிதை ஒன்று இந்த வாரக் குங்குமத்தில் வந்துள்ளது; படியுங்கள்” என்று எஸ்ஸெம்மெஸ் அனுப்பினார்.  அப்படி அவர் தனது நண்பர்கள் 1000 பேருக்காவது அனுப்பி இருப்பார்.  அடப் பாவிகளா என்று நினைத்துக் கொண்டேன்.  ராஜேஷ், நீங்கள் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை.  அவருக்கும் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியவில்லை. தமிழில் ஏன் நீங்கள் எழுத்தாளன் ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று தயவு செய்து சொல்லுங்கள்.
32 ஆண்டுகளுக்கு முன்பு சே கெபாரா பற்றித் தமிழ்நாட்டில் ஒரு ஆத்மாவுக்கும் தெரியாது.  தர்மு சிவராமு மட்டுமே ஓரிரு வரிகள் எழுதியிருக்கிறார்.  அப்போதே படிகள் என்ற பத்திரிகையில் சே கெபாரா பற்றி 20 பக்கத்துக்கு ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன்.  படிகள் அப்போது 200 பேர் படிக்கும் பத்திரிகை.  அந்தக் கட்டுரை எழுதுவதற்காக நான் 15 நாட்கள் ஆபீஸுக்கே போகவில்லை.  சே எழுதிய கெரில்லா வார்ஃபேர், பொலிவியன் டைரி என்ற இரண்டு புத்தகங்களையும் வரிக்கு வரி படித்து அதிலிருந்து அதிக அளவில் மொழிபெயர்த்து மேற்கோள் காட்டி எழுதப்பட்ட கட்டுரை அது.  அந்தப் புத்தகங்கள் அப்போது இந்தியாவில் கிடைக்கவில்லை.  தில்லியில் உள்ள ராணுவ அமைச்சக நூலகத்திலிருந்து ராணுவ அமைச்சக அதிகாரி ஒருவர் எடுத்துக் கொடுத்தார்.  படித்து எழுதினேன்.  உலகம் முழுவதும் ராணுவத் துறைகளில் அப்புத்தகம் கட்டாயம் உண்டு.  இன்று அந்த சே சினிமாக்காரர்களின் டீ ஷர்ட்டில் தொப்பியுடன் காட்சி அளிக்கிறார்.
அந்தக் கட்டுரையை எழுதிய போது என் வயது 26.  அந்தத் தப்பை நீங்களும் செய்யாதீர்கள் ராஜேஷ்.  என் கட்டுரைத் தொகுதிகளில் அந்தக் கட்டுரை இருக்காது.  இது போல் அதே படிகள் பத்திரிகையில் ஜான் பால் சார்த்தரின் இண்ட்டிமஸி என்ற குறுநாவலை ரவி என்ற பெயரில் மொழிபெயர்த்தேன்.  இப்படி ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதன் மூலம் நாம் வெள்ளைக்காரர்களின் அடிமைகளாகவே இன்னமும் இருக்கிறோம் என்பதையே நிரூபிக்கிறோம்.
இதேபோல் 17.11.11 அன்று என்னுடைய மொழிபெயர்ப்பாளரான ஜி.க்கு நான் ஒரு நீண்ட கடிதம் எழுதினேன்.  அதுவும் கிட்டத்தட்ட இதே கடிதம் மாதிரிதான் இருந்தது.  என்ன பிரச்சினை என்றால், என்னுடைய நாவலை மொழிபெயர்க்க எடுத்துக் கொண்டு விட்டால் அப்புறம் நீங்கள் எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியாது.  சில வாக்குறுதிகளை மீறித்தான் ஆக வேண்டும்.  அப்போது சொன்னேன்; இப்போது சாருவை மொழிபெயர்க்கிறேன்; முடியாது; வருந்துகிறேன் என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.
முக்கியமாக தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியதன் வரலாற்றுக் கடமையைப் புரிந்து கொள்ளுங்கள்.  தமிழ் எழுத்தாளர்கள் நூறாண்டுத் தனிமையில் கிடக்கிறார்கள்.  ஜி.க்கு நான் எழுதிய கடிதத்தின் சில பகுதிகள்:
தொடரும்…
Comments are closed.